சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் சிறைக்குள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய சிறை காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த விரேந்திர சேத்தியாவின் மகன் பியூஸ் மானுஷ். சமூக ஆர்வலரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே மேம்பால பணியை தடுத்ததாக கூறி கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து சிறையில் தன்னை சிறை அதிகாரிகள், காவலர்கள் தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

எனவே, இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பியூஸ் மானுஷ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறை காப்பாளர் மருதமுத்துவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். சிறை காப்பாளர் மருதமுத்து இன்று ஓய்வுபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.