Asianet News TamilAsianet News Tamil

குட் நியூஸ்!! கட்டணமில்லா பயணம்.. இனி கவலை இல்லை.. பெண்களுக்கு நலன் கருதி “பிங்க் நிற பேருந்து”..

பெண்களுக்கு இயக்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்துகளை பயணர்கள், எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் படி,  ”பிங்க்” நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது.

Pink color bus for free travel for women - Tamil Nadu government action
Author
Chennai, First Published Aug 6, 2022, 10:57 AM IST

திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சட்டமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிப்படி, பெண்களுக்கு அரசு மாநகர பேருந்துகளில் கட்டணமில்லா இலவச பயணம் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  இந்நிலையில் பெண்களுக்கு இயக்கப்பட்டு வரும் கட்டணமில்லா பேருந்துகளை பயணர்கள், எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் படி,  ”பிங்க்” நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:சினிமாவை மிஞ்சிய விபத்து! வாக்கிங் சென்றவர்கள் மீது மோதிய கார்! தூக்கி வீசப்பட்ட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி

மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கடை கோடி மக்கள் முதல் ஏராளமானோர் இதில் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. சாதாரண கட்டண பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி , வெள்ளை போர்டு அல்லது மகளிருக்கு கட்டணம் இலவசம் என்று எழுதி ஒட்டப்பட்டுள்ள பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க:பிங்க் நிறமாக மாறுகிறது மகளிர் பேருந்துகள்.. பொதுமக்கள் குஷி.. தொடங்கி வைக்கும் உதயநிதி !

இந்த வகை பேருந்துகளை பயணர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் தற்போது பேருந்தின் முன் மற்றும் பின்பகுதி பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 60 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கபட்டுள்ளன. பிங்க் நிறத்தில் மாற்றப்பட்டுள்ள பேருந்துகளின் சேவையை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios