சிவகங்கை 

சிவகங்கையில் மாற்றுத் திறனாளி சிறுமியை வன்புணர்வு செய்து படுகொலை செய்த பக்கத்து வீட்டு இளைஞரை காவலாளர்கள் கைது செய்தனர்.

SIVAGANGAI name board க்கான பட முடிவு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ளது அச்சரம்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி சிறுமி ரஞ்சனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 

17 வயதே நிரம்பிய இந்த சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடலை மீட்ட காவலாளார்கள் உடற்கூராய்வு நடத்திய பின்னர் விசாரணையை தொடர்ந்தனர். ரஞ்சனியின் உடல் உடற்கூராய்வுக்கு பிறகு அவரது உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டது.

rape க்கான பட முடிவு

பின்னர், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த நாய் பக்கத்து வீட்டிற்குள் ஓடிப்போய் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தது. இதனையடுத்து காவலாளர்கள் அந்த வீட்டில் வசிக்கும் பழனிச்சாமியிடம் விசாரணை நடத்தினர். 

அப்போது அவரது மகன் மாணிக்கம் (27) என்பவர் ஏற்கெனவே பெண்ணிடம் முறைகேடாக நடந்த்தால் 6000 அபராதம் செலுத்தியவர் என்பதை காவலாளர்கள் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் மாணிக்கத்தை தேடினர். ஆனால், அவர்  தலைமறைவாகிவிட்டார். 
  
உடனே காவலாளர்கள் செல்வதுபோல சென்றனர். பிறகு நள்ளிரவில் வீட்டுக்கு வந்த மாணிக்கத்தை வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ரஞ்சனியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.  அவரை காவலாள்ர்கள் நேற்று கைது செய்தனர்.

வாக்குமூலம் க்கான பட முடிவு

அவரது வாக்குமூலத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். "எனக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வருகிறேன். குழந்தை இல்லை. செவ்வாய்க்கிழமை காலை சாராயம் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது ரஞ்சனி தனியாக குளித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். அவரிடம் தவறாக நடக்க முயன்றபோது தப்பிக்க முயன்றார். 

அப்போது ரஞ்சனியை  இரும்புக் கம்பியால் தலையில் தாக்கிவிட்டு கொன்று விடுவேன் என்று மிரட்டி வீட்டிற்குப் பின்புறம் உள்ள புதர் நிறைந்த பகுதிக்கு தூக்கிச் சென்றேன். அங்கு அவரை பாலியல் வன்புணர்வு செய்தேன். 

தொடர்புடைய படம்

அதன்பின்னர் ரஞ்சனியின் அரை சவரன் காது தோடுகளைக் கழற்றி எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டேன். அந்த தோடுகளை அதே ஊரில் உள்ள எனது சகோதரியின் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்துவிட்டு அருகேயுள்ள பகுதியில் சீட்டு விளையாடினேன். அதன்பின்னர் இரவு வீட்டுக்கு திரும்பும்போது போலீசிடம் சிக்கிக் கொண்டேன்" என்று கூறியுள்ளார். 

மாணிக்கத்தின் மீது பாலியல் வன்புணர்வு, கொலை மற்றும் திருட்டு ஆகிய மூன்று பிரிவுகளில் காவலாளர்கள் வழக்குப் பதியப்பட்டுள்ளது.