பத்திரப்பதிவில் குளறுபடி செய்வோருக்கு ஆப்பு.. அமல்படுத்தப்பட புதிய விதிமுறை - தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
பத்திரப்பதிவை பொறுத்தவரை வெகு சில சமயங்களில், கட்டிடங்கள் இருப்பதை மறைத்துவிட்டு, காலி இடம் என்று கூறி பத்திரப்பதிவு செய்யப்படுவதால் பெரிய அளவில் அரசுக்கு பாதிப்பு ஏற்படுவதால், தமிழக அரசு ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதாவது தமிழகத்தை பொறுத்தவரை சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வரும்பொழுது அங்கே அளிக்கப்படும் பல முக்கிய ஆவணங்களில் ஒன்றாக, பதிவு செய்யப்படும் நிலத்தின் புகைப்படத்தை ஒரு முக்கியமான ஆதாரமாக சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்பட இருக்கின்ற சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஒரு ஆவணமாக இருக்க வேண்டும் என்பதுதான் அந்த புதிய உத்தரவு. அதே போல இந்த புகைப்படங்களை ஜியோ கோவார்டிநேட்ஸ் னட்எனப்படும் புவியியல் குறியீடுகளோடு புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டிடங்கள் கட்டி முடித்த பிறகு, அதை காலி இடங்கள் என்று கூறி பத்திர பதிவுகளை செய்து செல்வதால் அரசுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படுவதாக பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு தற்போது இந்த அதிரடி நடவடிக்கையை வெளியிட்டுள்ளது.
மாவட்டச் செயலாளரின் காலில் விழுந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி; புதுக்கோட்டையில் பரபரப்பு