திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இன்று கோலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை செய்தி சேகரிப்பதற்காக சென்ற இந்து நாளிதழ் புகைப்பட கலைஞர் திடீர் மாரடைப்பு ஏற்படுத்து மரணம் அடைந்தார்.
சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் இன்று அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமோடு கலந்து கொண்டு சிறப்பு தரிசனத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வை தி ஹிந்து நாளிதழின் புகைப்பட கலைஞர் சீனிவான் தனது கேரமா மூலம் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார்.
இது என்ன லவ் லெட்டரா? வாங்க மாட்டேன்னு திருப்பி அனுப்புவதற்கு? இபிஎஸ்ஐ வச்சு செய்யும் புகழேந்தி..!

புகைப்பட கலைஞர் மரணம்
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சீனிவாசனை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே மாரடப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செய்தி சேகரிக்க சென்ற புகைப்பட கலைஞர் உயிரிழந்ததற்கு பத்திரிக்கையாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி இந்து நாளிதழின் மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசன் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழகத்தை கைப்பற்ற செம பிளான் போட்ட பாஜக..!! நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரத்தில் மோடி போட்டியா.?

பத்திரிக்கையாளர் மன்றம் இரங்கல்
சென்னை பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பின் போது, பணியில் ஈ.டுபட்டிருந்த 'தி ஹிந்து' மூத்த புகைப்படக் கலைஞர் கே.வி.சீனிவாசனுக்கு (வயது 56) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
Vaikuntha Ekadashi 2023: ஸ்ரீரங்கம், திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்
