திருப்பூர்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் நகர அரங்க மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலமாக இன்னாள், முன்னாள் முதல்வரின் நலத்திட்ட உதவிகள் அடங்கிய அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருப்பூர் நகர அரங்க மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலமாக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது.

இந்தக் கண்காட்சியை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி திறந்து வைத்துப் பார்வையிட்டார். கண்காட்சியில் முதலமைச்சர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஆகியோர் வழங்கிய அரசு நலத்திட்ட உதவிகள் குறித்தப் புகைப்படங்கள், புகழ்பெற்றத் தலைவர்களை சந்தித்த புகைப்படங்கள் இடம்பெற்றன.

இதைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் பார்வையிட்டனர். அரசின் திட்டங்கள் குறித்தும் விளக்கமாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, மாநகராட்சி ஆணையாளர் அசோகன், உதவி ஆட்சியர் ஷ்ரவன்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாண்டி, திருப்பூர் வடக்கு தாசில்தார் சுப்பிரமணியம், மாநகர பொறியாளர் ரவி, மாநகர் நல அதிகாரி பூபதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.