Asianet News TamilAsianet News Tamil

ஆடல… அசையல… இப்படியே இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்..? வாகன ஓட்டிகனின் ஆசை

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவது வாகன ஓட்டிகளை சந்தோஷப்படுத்தி உள்ளது.

Petrol price no change
Author
Chennai, First Published Sep 23, 2021, 7:44 AM IST

சென்னை: தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவது வாகன ஓட்டிகளை சந்தோஷப்படுத்தி உள்ளது.

Petrol price no change

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துககு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. 15 ஆண்டுகளாக இருந்த நிலை மாற்றப்பட்டு நாள்தோறும் விலை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்றைய விலை நிலவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய விலையில் மாற்றமின்றி விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 98.96 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 93.26 ரூபாயாக உள்ளது.

Petrol price no change

கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மாறாமல் ஆணியடித்த மாதிரி ஒரே விலையில் இருக்கிறது. இது வாகன ஓட்டிகளை ஆச்சரியத்திலும், சந்தோஷத்திலும் ஆழ்த்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios