petrol diesel rate reduced today

குறையுது குறையுது...கொஞ்சம் கொஞ்சமா குறையுது....”பெட்ரோல் டீசல் விலை”...!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெட்ரோல்,டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.அதன்படி இன்று பெட்ரோல் டீசல் விலை என்ன என்பதை பார்ப்பதற்கு முன் சில விஷயத்தை தெரிந்துக்கொள்ளலாம்.

''சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு வருகின்ற சூழ்நிலையிலும், மத்தியில் அரசு தினமும் விலை நிர்ணயம் என்ற கொள்கையின் அடிப்படையில், பெட்ரோல் - டீசல் விலையை தினமும் உயர்த்தி மக்கள் மீது ஒரு விதமான சுமையை ஏற்படுத்தி விட்டது என்றே கூறலாம்

பெட்ரோல் டீசல் என்பது அத்தியாவசிய பொருளாகும். அனைவராலும் பயன்படுத்தப்படும் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்ததால், மக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாகவே சற்று விலை குறைந்து காணப்படுகிறது.பெட்ரோல் டீசல் மீதான விலை ஐந்து பைசா,நான்கு பைசா என குறைந்தாலும்,..குறைவு குறைவு தானே...அந்த வகையில் தொடர்ந்து மூன்று நாட்களாகவே விலையில் மிக சிறிய மாற்றம் வந்துள்ளது.

அதாவது பைசா கணக்கில் தான் பெட்ரோல் டீசல் மீதான விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அதன் படி

பெட்ரோலின் விலை 4 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.70.76ஆகவும், டீசலின் விலையில் 3 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.59.91ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன

இதே போன்று, தொடர்ந்து சிறுக சிறுக பெட்ரோல் டீசல் மீதான விலை குறைந்து வந்தால், பொதுமக்கள் மிகவும் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது

.