petrol deisal price increased by oil corporation private limited
பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 44 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் நிலவரப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் டீசல் விலையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது.
அதன்படி தற்போதும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 44 பைசாவும் அதிகபடுத்தபட்டுள்ளன.
இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
