Asianet News TamilAsianet News Tamil

அப்படினா ஆளுநர் மாளிகை சொன்னது அனைத்தும் பொய்யா! வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய காவல்துறை.!

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடியை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கூட்டாக விளக்கம் அளித்துள்ளனர். 

Petrol bomb incident... Police DGP shankar jiwal explanation tvk
Author
First Published Oct 27, 2023, 3:11 PM IST

ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி முற்றிலும் பொய்யானது என வீடியோ ஆதாரம் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  எதிர்க்கட்சிகள் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக இருக்கிறது என விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநர் மளிகை தரப்பில் இருந்து டிஜிபி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டது. அதில், ராஜ்பவன் மெயின் கேட் எண்.1 வழியாக பெட்ரோல் குண்டுகளை ஏந்திய மர்ம நபர்கள் சிலர் உள்ளே நுழைய முயன்றதாகவும், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் பிரதான நுழைவாயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது என்றும் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை செக்யூரிட்டி பிடித்ததாகவும் கூறினர். 

Petrol bomb incident... Police DGP shankar jiwal explanation tvk

மேலும், 2022ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி அன்று நடந்த ஒரு சம்பவத்தை விளக்குவதற்கு,  ஆளுநர் தருமபுரம் ஆதீனத்தில் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தபோது, ​​தடியடி மற்றும் கற்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தாக்கியவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. 

Petrol bomb incident... Police DGP shankar jiwal explanation tvkஇந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடியை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கூட்டாக விளக்கம் அளித்துள்ளனர். அதில்,  குற்றவாளி கருக்கா வினோத் மஞ்சள் சட்டை, ஜூன்ஸ் பேண்ட் அணிந்து தனியாக தேனாம்பேட்டை வழியாக கிண்டி வரை நடந்து வந்ததாகவும், அவருடன் யாரும் வரவில்லை. 4 பெட்ரோல் குண்டுகளில் 2 ஐ சர்தார் வல்லபாய்படேல் சாலையில் வீசினான். ஆளுநர் மாளிகை மீது வீசவில்லை. 

Petrol bomb incident... Police DGP shankar jiwal explanation tvk

கருக்கா வினோத்தை 5 போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விஷமிகள் உள்ளே புகுந்ததாக கூறப்படுவது தவறு. ராஜ்பவன் ஊழியர்கள் கருக்கா வினோத்தை பிடித்ததாக கூறியது பொய். மயிலாடுதுறையில் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்ட நிலையில் அதுகுறித்த வீடியோ காட்சிகளையும் காவல்துறை வெளியிட்டது. மயிலாடுதுறையில் கற்களாலும், குச்சியாலும் தாக்கப்பட்டார் என்ற தகவல் தவறானது. எப்ஐஆர் போடப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றனர். தமிழ்நாடு மிக அமைதியான மாநிலமாக உள்ளது. சென்னை பாதுகாப்பான நகரம் என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது என டிஜிபி சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios