திருவள்ளூரில, மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும் என்று கோரி, கையில் கண்காணிப்பு கேமராக்களுடன் வந்து மணல் லாரி உரிமையாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்புத் தலைவர் யுவராஜ், செயலாளர் ராஜகோபால், பொருளாளர் அகத்தியன், மணல் லாரி உரிமையாளர்கள் ஆட்சியர் எ.சுந்தரவல்லியிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், “திருவள்ளூர் மாவட்டத்தில் ஆற்றுப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவைகளை கொண்டு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்”

“மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும்”.

“மணல் கடத்தலுக்கு உடந்தையாக உள்ள அதிகாரிகளை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தி அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.