petition filed in high court seeking ban on aram movie

நடிகை நயன்தாரா நடித்து அண்மையில் வெளியான திரைப் படம் அறம். இந்தப் படத்தில், நயன்தாரா ஒரு மாவட்ட ஆட்சியராக வேடம் தாங்கி நடித்து புகழ்பெற்றுள்ளார். 

அதிகார மட்டத்தில் நடக்கும் குளறுபடிகள், அரசின் செயல்பாடு என பல விமர்சனங்களைத் தாங்கி வந்திருந்தது அறம் திரைப்படம். ஏற்கெனவே ஜிஎஸ்டி உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை தவறாக சித்திரித்து வெளியான மெர்சல் படம் கடும் கண்டனங்களைப் பெற்றது. அது போல், மாநில அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் வெளியான அறம் படத்துக்கு முட்டுக்கட்டைகள் வரக் கூடும் என்று பலராலும் பேசப்பட்டது. 

இந்நிலையில் நடிகை நயன்தாரா நடித்த அறம் திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பரிவாரா என்ற தங்களது படத்தை உரிமம் பெறாமல் தமிழில் எடுத்து வெளியிட்டுள்ளதாகக் கூறி ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு கன்னட தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருப்பினும், அறம் படம் வெளியாகி, சில நாட்கள் கடந்து பலரின் கவனத்தையும் பெற்று, வசூலைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.