Asianet News TamilAsianet News Tamil

”பாத்ரூம் கழுவிட்டு தான் ஸ்கூலுக்கு வரணும்” மாணவர்களை பாத்ரூம் கழுவ சொல்லிய அரசு பள்ளி ஆசிரியர்கள் !!

பள்ளி மாணவ - மாணவியரை கழிப்பிடங்களை சுத்தம் செய்ய வைத்த அவலம் பெருந்துறை முள்ளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிகழ்ந்திருக்கிறது.

Perundurai Mullampatti Panchayat Union Primary School where school children were made to clean toilets viral on social media
Author
Tamilnadu, First Published Mar 27, 2022, 11:33 AM IST

பாத்ரூம் கழுவிய மாணவர்கள் :

ஈரோடு மாவட்டம், பெருந்துறை முள்ளம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்து இருக்கிறது.  இந்த பள்ளியில் பல்வேறு சாதியை சேர்ந்த மாணவர்கள் படிக்கும்போதிலும், சில ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களை மட்டும் ஆசிரியர்கள் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்திருக்கிறார்கள்.

இந்த கொடுமை குறித்து பள்ளியின் ஆசியர்களிடம் முறையிட்டபோதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களும் இதற்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்பது மாணவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. சாதியைக் கொண்டு சமூகத்தின் அடுக்குகளில் இருக்கும் குறிப்பிட்ட மக்களை மட்டும் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்துவதை அறம் உள்ள மனிதர்களாக நாம் எதிர்க்கிறோம்.  மனித மலத்தை சக மனிதனே கையால் அள்ளும் இழிநிலைக்கு இந்த சாதி எனும் கொடூரமே காரணமாக இருக்கிறது. 

Perundurai Mullampatti Panchayat Union Primary School where school children were made to clean toilets viral on social media

வளர்ந்துவரும் நாட்டில் எல்லாவற்றுக்கும் பல தொழிற்நுட்ப கண்டுபிடிப்புகளை செய்துவிட்ட ஆளும் வர்க்கம், இதற்கு மட்டும் தீர்வை ஏற்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகப்பெரிய அநீதி. அதிலும் பாடசாலைகளில் படிக்கும் குழந்தைகள் மீதே இத்தகைய வன்முறையை நிகழ்த்தியிருப்பது ஏற்கமுடியாததாகும். இதன்மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து, எங்கும் இப்படியான சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது.

வற்புறுத்தும் ஆசிரியர்கள் - வைரல் வீடியோ :

தற்போது இதுதொடர்பான வீடியோ ஓன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், 'இரண்டு குழந்தைகள்  பள்ளி பாத்ரூமை துடைப்பம் கொண்டு கழுவி வருகின்றனர். அப்போது ஒரு நபர், நீ ஏன் பாத்ரூம் கழுவிட்டு வர என்று கேட்க, அந்த விபரம் அறியாத சிறுவன் யார் முதலில் பள்ளிக்கு வருகிறார்களோ அவர்கள் தான், பாத்ரூமை கழுவ வேண்டும் என்று சொன்னாங்க என்று மழலை மாறாமல் சொல்கிறான் அந்த சிறுவன். 

Perundurai Mullampatti Panchayat Union Primary School where school children were made to clean toilets viral on social media

யார் இப்படி செய்ய சொன்னார்கள் என்று கேட்க, டீச்சர் தான் என்று சொல்ல,உங்க வீடு எங்க இருக்கு என்று கேட்க, தோப்புக்காடு என்றும், உங்க டீச்சர் பேர் என்ன என்று கேட்க தெரியாது என்று சொல்கிறான். மேலும் பேசிய மற்றொரு மாணவி, பாத்ரூம் கழுவ சொல்லுவாங்க. ஸ்கூல்ல கூட்டுறதுல இருந்து எல்லாமே நாங்க தான் பண்ணுவோம்.

டீச்சர் பேரு சுதா என்றும், தலைமை ஆசிரியர் மைதிலி என்றும் கூறுகின்றனர். தினமும் பாத்ரூம் கழுவ சொல்லி மாணவர்களை துன்புறுத்தும் இதுபோன்ற ஆசிரியர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து இருக்கின்றனர்.  

Follow Us:
Download App:
  • android
  • ios