திருநெல்வேலி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்த விலக்கு அளிக்க வேண்டும் என்று திருநெல்வேலியில் நடந்த மனிதநேய மக்கள் கட்சி பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி கிழக்கு மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் திருநெல்வேலி நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு பொறுப்புக் குழுத் தலைவர் உஸ்மான்கான் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் அப்துல் சமத், த.மு.மு.க. மாநிலப் பொதுச் செயலாளர் அமீது, மாநிலச் செயலாளர் மைதீன்சேட் கான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், “நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும்,

வருகிற புதன்கிழமை தி.மு.க. சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்,

உள்ளாட்சி தேர்தல் பணியைத் தொடங்க வேண்டும்,

பூத் குழுக்களை விரைவில் அமைக்க வேண்டும்,

கட்சி வளர்ச்சி பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.