Asianet News TamilAsianet News Tamil

பெரியார் சிலை மீது காலணி வீசிய ஜெகதீசன் மீது பாய்ந்தது குண்டாஸ்!

சென்னையில் பெரியார் சிலையை அவமதித்ததால் கைது செய்யப்பட்ட ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வழக்கறிஞர் ஜெகதீசன் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Periyar Statue Jagadeesan Guntas
Author
Chennai, First Published Sep 19, 2018, 2:56 PM IST

சென்னையில் பெரியார் சிலையை அவமதித்ததால் கைது செய்யப்பட்ட ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வழக்கறிஞர் ஜெகதீசன் குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக நேற்று முன்தினம் தந்தை பெரியாரின் 140-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் நேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். Periyar Statue Jagadeesan Guntas 

அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். பெரியார் சிலை அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பெரியார் சிலையை ஒரு நிமிடம் வெறித்து பார்த்தார். பின்னர் திடீரென தனது காலில் இருந்த காலணியை கழற்றி பெரியார் சிலை மீது ஏறிந்தார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காலணி வீசியவரை சுற்றி வளைத்து தாக்கினார். Periyar Statue Jagadeesan Guntas

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெகதீசனை மீட்டு வாகனத்தில் ஏற்றினர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியனர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பெரியார் சிலை மீது காலணி வீசிய வாலிபர் நேற்று உடனடியாக கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டாஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios