26 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு நேற்று பேரறிவாளன் பரோலில்  விடுவிக்கப்பட்டதற்கு  திமுக செயல் தலைவர் மு.க.கஸ்டாலின் வரவேற்பு தெரிவித்ததோடு, மனிதநேய அடிப்படையில் அவரை நிரந்தரமாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட பேரறிவாளன், 30 நாட்கள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், பேரறிவாளன் பரோலில் விடுவிக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

அதே நேரத்தில் பேரறிவாளனை மனித நேய அடிப்படையில் நிரந்தரமாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சட்டமன்றத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பேராறிவாளனை விடுவிக்க வேண்டும் என  பல கோரிக்கைகளை விடுத்து வந்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்..