வாலஜாபாத் வட்டார அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டிருக்கும் விளம்பரப் பலகையால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

கிராமப் பஞ்சாயத்துகளில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல இலட்சம் செலவில் விளம்பரப் பலகைகள் வடிவமைக்கப்பட்டன.

ஆனால், அவை உரிய காலத்தில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படவில்லை.

இதையடுத்து, பல இலட்சம் செலவில் வடிவமைக்கப்பட்ட அந்த விளம்பரப் பலகைகள் வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அவை தற்போது வெயிலிலும், மழையிலும் கிடந்து வீணாகின்றன.

இதுபோல், மக்களின் வரிப் பணம் வீணாவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், இதற்குக் காரணமான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.