People who looted a bridal shop bar ...
புதுக்கோட்டை
குடிகாரர்களின் தொல்லை அதிகரித்ததால் ஆத்திரமடைந்த மக்கள் திருப்பூரில் இருக்கும் புதுக்கோட்டையைச் சேர்ந்தவரின் டாஸ்மாக் சாராயக் கடை பாரை சூறையாடினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பலைச் சேர்ந்தவர் அசோக் (48). இவர், திருப்பூர் மாவட்டம், கொடுவாய், வெள்ளியம்பாளையம், பொள்ளாச்சி சாலையில் டாஸ்மாக் சாராயக் கடையின் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.
இங்கு சாராயக்கடையை திறந்தபோதே மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கடையை மூட வலியுறுத்திப் போராட்டமும் நடத்தினர்.
எனினும், டாஸ்மாக் நிர்வாகம், சாராயக் கடையைத் தொடர்ந்து நடத்தி வந்தது. எந்த நேரமும் திறந்திருக்கும் சாராயக் கடை பாரால், அப்பகுதியினர் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
பள்ளி மாணவியரை, குடிகாரர்கள் சிலர், கிண்டல் செய்ததால், பிரச்சனை உருவெடுத்தது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியினர் 50க்கும் மேற்பட்டோர் நேற்று சாராயக் கடை பாருக்குள் நுழைந்தனர். அப்போது பார் ஊழியர்கள் இருவர் இருந்துள்ளனர்.
பாரில் இருந்த டேபிள், சேர், குளிர்பான பாட்டில் உள்ளிட்டவற்றை மக்கள் அடித்து நொறுக்கினர். பாரில் விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு சாராய பாட்டில் பெட்டிகளை, சலையில் போட்டு உடைத்தனர்.
பின்னர் இதுகுறித்து மக்கள் கூறியது:
“'இங்கு சாராயக் கடை தொடங்கியதில் இருந்தே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. தனியாக செல்லும் பெண்களை தொந்தரவுச் செய்கின்றனர். சாராயக் கடையை மூடக்கோரி, ஆட்சியரிடம் ஐந்து முறை மனு கொடுத்தும், எந்த பலனுமில்லை” என்று கூறினர்.
