Asianet News TamilAsianet News Tamil

விருதுநகரில் உள்ள அரசு பள்ளிகளில் உடனடியாக நீட் தேர்வு பயிற்சி மையத்தை தொடங்க மக்கள் கோரிக்கை...

People in the government schools in Virudhunagar immediately request the people to start the NET Exam Training Center ...
People in the government schools in Virudhunagar immediately request the people to start the NET Exam Training Center ...
Author
First Published Dec 22, 2017, 9:49 AM IST


விருதுநகர்

பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டதுபடி விருதுநகரில் 11 அரசு பள்ளிகளில் உடனடியாக நீட் தேர்வு பயிற்சி மையத்தை தொடங்கி மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகளை தொடங்க வேண்டும் என்றும் அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் கல்வியாண்டில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித் துறை தமிழகம் முழுவதும் 466 பயிற்சி மையங்களை தொடங்க உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 14 பயிற்சி மையங்களை தொடங்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதில் மூன்று பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகள்.

இதுதவிர படந்தால், எம்.ரெட்டியபட்டி, சுந்தரபாண்டியம், வீரசோழன், டி.ராமச்சந்திராபுரம், ஆலங்குளம் ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், சத்திரப்பட்டியில் உள்ள இரண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும், திருத்தங்கல், அருப்புக்கோட்டை, விருதுநகர் ஆகிய ஊர்களில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளிலும் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது..

ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிற்சி மையங்கள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்துவரும் நிலையில் அரசு பள்ளிகளில் இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவில்லை என்றும் இந்தப் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பயிற்சியை நடத்துவதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.

கல்வியாண்டு தொடக்கத்திலேயே பயிற்சி அளித்தால்தான் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறும் அளவிற்கு பயிற்சி பெற வாய்ப்பு கிடைக்கும். ஆனால், கல்வியாண்டு முடிய இன்னும்  மூன்று மாதங்களே உள்ள நிலையில் பயிற்சி தொடங்காமல் இருப்பது வருத்தத்திற்கு உரியது.

கிராமத்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலையில் பள்ளிக்கல்வித் துறை இதுபற்றி கண்டுக் கொள்ளாமல் இருப்பது வேதனை தருவதாகும்.

எனவே, மாவட்ட நிர்வாகம் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 அரசு பள்ளிகளிலும் நீட் தேர்வுக்கான பயிற்சியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios