People hunger strike demanding action against the damaged house

அரியலூர்

வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூரில் விவசாயிகள் மற்றும் மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டன்ர். வியாபாரிகள் கடைகளை அடைத்துவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் இரத்தினம். இவரது மகன்கள் சுப்பிரமணியன் (60), சங்கர் (47).

இவர்களின் பூர்வீக வீடு மற்றும் இடத்தை கிழநத்தம் கிராமத்தை சேர்ந்த கண்ணனிடம் (42), சுப்பிரமணியன், சங்கருக்கு தெரியாமல் முறைகேடாக விற்றுள்ளார்.

இதனையடுத்து கண்ணன், சங்கர் வீட்டிற்கு வந்து இடத்தை காலி செய்து தரும்படி கூறியுள்ளார். அதற்கு சங்கர், இதுகுறித்து செயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்து சங்கரை வீட்டை காலி செய்யும் படி மிரட்டியுள்ளனர். மேலும், வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து சேதப்படுத்தி ஊள்ளனர்.

இதுகுறித்த சங்கர் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவலாளர்கள் கண்ணன் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சங்கரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50 பேர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதப்படுத்திய பொருட்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் விவசாயிகள் , வியாபாரிகள் மற்றும் மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரி வியாபாரிகள் கடைகளை அடைத்துவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.