புதுக்கோட்டை

புதுக்கோட்டையில், கடந்த ஒரு வருடமாக குடிநீரின்றி தவித்துவந்த இரண்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமாறு வலியுறுத்தினர்.

அப்போது, "இந்த இரண்டு கிராமங்களுக்கும் குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனையேற்ற பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.