சென்னையில் 11 வயது சிறுமியை அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்த 17 பேர்  சென்னையில் காது கேளாத, 7 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு 7 மாதங்களாக 17 பேர் தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்த இந்த சம்பவம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடையாதவர்களே இல்லை. இது குறித்து ட்விட்டரில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் பார்த்திபன் சிறுமியை சீரழித்தவர்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில்" இந்த நிமிடம்

இதே மணிக்கு

இங்கோ அங்கோ எங்கோ 

ஒரு பாலியல் வன்கொடுமை 

நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது 

அதுவும் தொலைக்கட்சியில் இன்றைய நிகழ்வை பார்த்தபடி

அதைத் தடுப்பது எப்படி?

என்னெனில் 

போனவாரம்

போனமாதம் 

போன வருடம் 

வேறு ஒரு சிறுமியின் உறைந்த 

ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர் ஈக்களாய் மொய்த்துகொண்டிருக்கையில் இந்த பதினேழாம் இன்னும் சில மிருகங்களும் செவித்திறனற்ற ஒரு சங்கு பஷ்பத்தினை பிய்த்தெறிந்துகொண்டிருன்தனர்.

எனவே கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கி ________க்கு அலையும் மனுஷ பிராணிகளை கண்டறிந்து காயடிக்க வேண்டும் " என இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.