சென்னை புழல் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த ஆயுள் தண்டனை கைதி தலைமறைவாகிவிட்டார்.
பெரியமேட்டைச் சேர்ந்த கைதி ஜானியை கண்டுபிடித்து தரக் கோரி வேப்பேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2003ல் பெண்ணைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜானி ஆயுள் தண்டனை பெற்றவர் , சமீபத்தில் பரோலில் வெளிவந்த இவர் பரோல் நாட்கள் முடிந்தவுடன் சிறை திரும்பவில்லை எஸ்கேப் ஆகிவிட்டார்.
அவரை வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர் .
