parents beaten the babies just for their dirt

பெற்ற குழந்தைகளை கயிற்றில் தொங்கவிட்டு....துடிக்க துடிக்க அடித்த தந்தை...!

பெற்ற குழந்தைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டும், மற்றொரு குழந்தையை மடக்கி மடக்கி துடிக்க துடிக்க சொந்த தந்தையே அடித்துள்ள அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ராஜாசமாத்தைச் சேர்ந்தவர் ஜெயின் சிங். இவருக்கு 5 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

ஜெயின் சிங்.கின் எந்த நடவடிக்கையும் மிக கொடூரமாகதான் இருக்குமாம்.அருகில் வசிப்பவர்கள் கூட இந்த நபருக்கு மிகவும் பயப்படுவார்களாம் ...

இந்நிலையில்,இவருடைய இந்த 2 குழந்தைகளும் மண்ணில் இயற்கையாக விளையாடி ,ஆடையை அழுக்காக்கி கொள்வார்களாம்.

இதனால் கோபமடைந்த வெறிப்பிடித்த தந்தை,5 வாயது மகனை கயிற்றில் தொங்கவிட்டும்,3 வயது குழந்தையை அங்கும் இங்கும் வழியால் துடித்து துடித்து அழும் அளவிற்கு அடித்துள்ளார்.

இந்த கோர செயல் நடக்கும் நிகழ்வை இவருடைய சகோதரர்வீடியோ எடுத்து உள்ளார்.

இந்த சம்பவத்தை அறிந்த போலீசார் ஜெயின் சிங் மற்றும் அவரது சகோதரரை கைது செய்து விசாரிக்கும் முறையில் விசாரித்து வருகின்றனர்.