திருப்பூர்
 
திருப்பூரில் காதலை கைவிடும்படி பெற்றோர் எச்சரித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் - அவினாசி சாலை அம்மாபாளையத்தை அடுத்த இராக்கியாபாளையம் பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார் மகள் ஹர்ஷா (17). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார். 

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பூர் கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் வீட்டிற்கு தெரியவந்தது. 

இதனையடுத்து ஹர்ஷாவை அழைத்து அவருடைய பெற்றோர் அறிவுரை கூறி படிக்கும்போது காதல் வேண்டாம் என்று காதலை கைவிடுமாறு கூறி எச்சரித்துள்ளனர். இதனால் ஹர்ஷா மன வேதனையில் விரக்தி அடைந்து காணப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் ஹர்ஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாராம்.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவலாளர்கல் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

காதலை கைவிடும்படி பெற்றோர் எச்சரித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.