Asianet News TamilAsianet News Tamil

பேஸ்புக்கால் அணி திரண்ட பல்லாயிரம் பேன்ட் ஷர்ட் இளைஞர்கள் - குலுங்கியது மெரீனா... புதிய எழுச்சி..!!!

parade for-jallikattu-7cbv84
Author
First Published Jan 8, 2017, 11:51 AM IST


தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, எருது விடும் திருவிழா, சேவல் சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுக்களை பீட்டா என்னும் விலங்கு நல வாரியத்தின் தூண்டுதலால் தடை செய்யப்பட்டது.

கடந்த 2 வருடங்களாக ஜல்லிக்கட்டு நடைபெறாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்.

parade for-jallikattu-7cbv84

 

டெல்லியில் போராட்டம், ஆர்ப்பாட்டம் பிரதமர் முதல் ஜனாதிபதி வரை மனுக்கள் என கெஞ்சியும் கதறியும் கூக்குரலிட்டும் ஒன்றும் பலனில்லை

கடந்த வாரம் திமுக பொருளாளர் அலங்காநல்லூரில் மிகபெரிய போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் மத்திய அரசிடமிருந்து எந்த பதிலுமில்லை.

இந்நிலையில் சென்னையில் பேன்ட் ஷர்ட் அணிந்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஜல்லிகட்டுக்கு ஆதரவாக அணி திரண்டனர்.

parade for-jallikattu-7cbv84

சென்னை மெரீனா கடற்கரை யாரும் எதிர்பார்காத அளவுக்கு இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

இது அரசியல் கட்சியினரோ அலல்து சமூக அமைப்பினரால் கூட்டப்பட்ட கூட்டம் அல்ல.

parade for-jallikattu-7cbv84

ஜல்லிக்கட்டின் மீது ஆர்வம் கொண்ட பல நூறு இளைஞர்கள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் விடுத்த அழைப்பின் பேரிலேயே இவ்வளவு பேர் கூடியுள்ளனர்.இது ஒரு புதிய எழுச்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த அளவுக்கு பேஸ்புக்கின் தாக்கமே பல்லாயிரக்கணக்கான மக்களை வரவழைத்திருக்கிறது என்றால் இதை திட்டமிட்டு போராட்டமாக முன்னெடுத்தால் தமிழகமே குலுங்கும் என்கின்றனர். இந்த பேரணியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios