தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க கோரி சென்னை மெரினா கடற்கரை சாலையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டை உச்சநீதிமன்றம் தடை செய்தது. இந்த தடைக்கு நாடு முழுவதும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

இந்த ஆண்டு ஜல்லிகட்டை நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு பேரணி சென்னை மெரினாவில் இன்று நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர்.