ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும், அவர்களுடைய சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுத்தார். 

மேலும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு 'புரோக்கர் பேராசிரியை' நிர்மலா தேவி மாணவிகளிடம் செல் போனில் உரையாடிய அந்த சர்ச்சை ஆடியோவில் ஆளுநர் என்று ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். இதனால் பலரது கவனமும் பன்வாரிலால் புரோகித் மீது திரும்பியது. 

இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதில் கொடுத்தார் ஆளுநர். அப்போது பேசிய இவர் "நிர்மலா என்பது யார் என்றே தனக்கு தெரியாது என்றும் ஆனால் மாணவிகளை தவறான பாதைக்கு கொண்டு சென்ற ஆசிரியை கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்".

அதேபோல் இது குறித்து விசாரணை செய்வதற்கு சி.பி.ஐ விசாரணை அவசியம் இல்லை என்று தெரிவித்தார். உடனே பத்திரிக்கையாளர்கள் சிலர் ஏன் சி.பி.ஐ விசாரணை வேண்டாம் என கூறுகின்றீர்கள் என கேள்வி எழுப்பியதும். தற்போது  விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும். இந்த விசாரணை குழுவில் உள்ள விசாரணை ஆணையர் சந்தானம், இந்த சர்ச்சை குறித்து தீவிர விசாரணை செய்து உண்மையை நிலையை வெளிப்படுத்துவார் என ஆளுநர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இந்த விவகாரத்தில் வெளிப்படையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தன்னுடைய நோக்கம் என்று காவலர்கள் அவர்களுடைய கடமையை தொடர்ந்து செய்யட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.