pannerselvam praising dheeran chinnamalai

ஆங்கில ஏகாதிபத்திய அரசை எதிர்த்து இந்திய விடுதலை போருக்கு முதலில் குரல் கொடுத்தவர் தீரன் சின்னமலை தான் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் விடுதலைக்கு உயிரைத் தந்து போராடிய வீரர்களுள் மிக முக்கியமானவர் தீரன் சின்னமலை.

ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகிலிருக்கும் மேலப்பாளையம் என்னும் ஊரில், ரத்னசாமி- பெரியாத்தா தம்பதிக்கு மகனாக 1756 -ம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 17-ம் தேதி பிறந்தார்.

வில், வாள், மல்யுத்தம் என அனைத்து வீரப்பயிற்ச்சிகளையும் கற்றவர். நான்காம் மைசூர் போரில் திப்பு சுல்தான் மறைந்ததும், கொங்கு நாட்டின் ஓடாநிலை என்ற பகுதியில் தனது ஆட்சியை நிலை நிறுத்தினார். பவானி-காவிரிக்கரை போர் உள்ளிட்ட மூன்று போர்களில் ஆங்கிலேயரைத் தோல்வியுறச் செய்தார்.

இன்றைய தினம் வீரர் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட நாள். இந்நிலையில், ஆங்கில ஏகாதிபத்திய அரசை எதிர்த்து இந்திய விடுதலை போருக்கு முதலில் குரல் கொடுத்தவர் தீரன் சின்னமலை தான் என முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய ஒருமைபாட்டை வித்திட்ட மாபெரும் தலைவர்களை போற்றி புகழ்வதில் ஜெயலலிதா முன்னிலை பெற்றிருந்தார் எனவும் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் தியாகம் போற்றுதலுக்குறியது எனவும் தெரிவித்தார்.