ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் திடீரென ஏற்பட்ட விரிசலால் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விரிசலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

கொச்சி வேம்பனாடு கடல் பாலத்தையடுத்து இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய பாலமானது ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலமாகும். இந்த பாலம் 146 தூண்கள் 270 அடி நீளம் கொண்டது. கடந்த 1914-ம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது. ஜெர்மனி பொறியாளர் ஜெர்ஷர் வடிவமைத்த இந்தப் பாலம் 1913-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மேலும் பாம்பன் ரயில் பாலம் தான் இந்தியாவின் முதல் கடல் பாலமாகும்.

இந்நிலையில் பாம்பன் தூக்கு பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதை அறிந்த ஊழியர்கள் உடனே உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஊழியர்கள் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் 5 மணிக்கு சென்னை செல்ல கூடிய ரயிலும், 8 மணிக்கு செல்ல கூடிய ரயிலும், திருச்சி - ராமேஸ்வரம், மதுரை - ராமேஸ்வரம் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.