வண்டி ஓட்டும்போது கண்டிப்பா ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும்…உயர்நீதிமன்றம் அதிரடி…

வாகனம் ஓட்டும்போது ஒரிஜினல்  ஓட்டுநர் உரிமத்தை, வாகன ஓட்டிகள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஒட்டுனர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அசல் சான்றிதழ்களை கையில் வைத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொலைந்தால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் மேலும் நீதிமன்றம் தானாக வழக்கை விசாரணைக்கு எடுக்க டிராபிக் ராமசாமி கோரிக்கை விடுத்தார். 

இதற்கு நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து விசாரிக்க மறுப்பு தெரிவித்ததோடு  மனுதாரர் வழக்கு தொடர்ந்தால் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி அமர்வு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமியுன் வழக்கறிஞர்,  இன்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி எம்.சுந்தர் அடங்கிய அமர்வில் முறையிட்டார். அவரச வழக்காக விசாரிக் கோரி தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், இதனை அவசர வழக்காக எடுக்க முடியாது. நீங்கள் முதலில் மனு தாக்கல் செய்யுங்கள், வழக்கு பட்டியலிடப்பட்டு வரும் போது விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படும் என தெரிவித்தனர்.

அதே நேரத்தில் வாகன ஓட்டிகள் தற்போது அசல் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.