ops gkv meet
ஆர்,கே. நகரில் மதுசூதனனுக்கு ஆதரவா ஓபிஎஸ் - ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு…
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனை, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்று சந்தித்துப் பேசினார்.
ஜெயலலிதா மறைவையடுத்து ஆர்,கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுகவின் இரு அணிகள், பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
மதிமுக, தாமக. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதிமுக இரண்டாக உடைந்ததையடுத்து ஓபிஎஸ் அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
இதையடுத்து ஓபிஎஸ் அணிக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அத்தொகுதியில்போட்டியிடும் 4 சுயேட்சை பேட்பாளர்கள் மதுசூனனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சந்தித்து ஆர்.கே. நகரில் போட்டியிடும் மதுசூதனுக்கு ஆதரவு கோரினார்.
