எடப்பாடி பழனிசாமியை சிரிக்க வெச்சுட்டா 10 ஆயிரம் ரூபாய் பரிசு….ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….

முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமியை யாராவது சிரிக்க வைத்து விட்டால்  10 ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாக முன்னாள் அமைச்சர் ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திருவாரூரில் ஓபிஎஸ் அணி சார்பில் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஓபிஎஸ், ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து இதுவரை விசாணை நடத்த எடப்பாடி பழனிசாமி அரசு முன்வரவில்லை என குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் புதிய கூட்டணியை உருவாக்கி மக்களை ஏமாற்றி வருவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.

சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கி வைக்க வேண்டும் என எத்தனையோ முறை நாங்கள் எடுத்துக் கூறியும் அதை தற்போதைய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

சட்டசபையிலோ அல்லது வெளியில் வேறு எங்காவதோ முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிரித்து பேசி பார்த்ததில்லை, அவரை சிரிக்க வைத்தால் 10,000 ரூபாய் பரிசு தருவதாக  ஓபிஎஸ் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் எப்போதும் என்னிடத்திலேயே பேட்டி எடுக்கிறீர்களே, எடப்பாடியிடம் உங்களால் பேட்டி எடுக்க முடியுமா ? என்றும் ஓபிஎஸ் கேள்வி எழுப்பினர்.