திண்டுக்கல்

பதவி சுகம் இருக்கும்வரை ஓ.பி.எஸ்-ம், ஈ.பி.எஸ்-ம் பிரிய வாய்ப்பே இல்லை என்று அமமுக கொ.ப.செ. தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

தங்க தமிழ்செல்வன் க்கான பட முடிவு

திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். 

அதில், "அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றாலே காவலாளர்கள் அனுமதி தருவதில்லை. ஒவ்வொருக் கூட்டத்திற்கும் நீதிமன்றத்துக்குச் சென்றே அனுமதி பெறவேண்டியுள்ளது. 

ops and eps க்கான பட முடிவு

எங்கள் கட்சிக் கூட்டங்களுக்குச் சேரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மிரண்டு போயுள்ளனர்" என்று அதிரடியாக கூறினார்.

மேலும். "அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தின்போது. 'கட்சிப் பணிக்காக தனது பதவியை ராஜினாமா செய்வேன்' என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது நல்ல கருத்து. பதவி சுகம் இருக்கும்வரை ஓ.பி.எஸ்-ம், ஈ.பி.எஸ்-ம் பிரிய வாய்ப்பே இல்லை" என்று நறுக்குன்னு சொன்ன தங்க தமிழ்செல்வன் முதல்வர் மீதான ஊழல் வழக்குப் பற்றியும் வாய் திறந்தார்.

தொடர்புடைய படம்

"நெடுஞ்சாலைத்துறைப் பணிகளில் ரூ.1500 கோடி ஊழல் நடந்துள்ளது என்று ஆறு மாதங்களுக்கு முன்பே நாங்கள் குற்றம் சாட்டினோம். தற்போதுதான் தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள் புகார் கொடுத்துள்ளன. 

அந்த ஊழல் தொடர்பாக முதலமைச்சர் மீது தி.மு.க. தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. நீதியமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கிறது? என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், அதற்குமுன்பே தார்மீக அடிப்படையில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் பதவியை ராஜினாமா செய்வதுதான் சரி" என்று அவர் அறிவுரை வழங்கினார்.