முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்சின் ஆழ்வார்பேட்டை வீடு அருகே மர்ம் நபர்கள் சிலர் போலி வெடிகுண்டு வீசிக் சென்றுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, அதனை வீசிச்சென்ற மார்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது தெருவில் உள்ள வீட்டில் வசிக்கிறார். ஓபிஎஸ்  தனது குடும்பத்தினருடன்  மதுரை சென்றிருந்தார். வீட்டில் போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் வீட்டின் அருகே பந்து போன்ற மர்ம பொருள் ஒன்று கிடந்தது. இது குறித்து  தேனாம்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல்  துறையினர் ஓபிஎஸ், வீட்டின் அருகே கிடந்த மர்ம பொருளை முதலில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர்.

சோதனையில் அது வெடிகுண்டு இல்லை என தெரிய வந்தது. அதன்பிறகு அதை எடுத்துச் சென்று தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து ஆய்வு செய்தனர். வெடிகுண்டு போன்ற தோற்றத்தில் இருந்த பொருள் கருப்பு நிற பிளாஸ்டிக் கவரால் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் பந்து போன்ற பொருள் இருந்தது. அதில் துவாரம் போட்டு மண்ணையும், பட்டாசு வெடிமருந்தையும் கலந்து நிரப்பி இருந்தனர்.

பந்து துவாரத்தில் திரி இணைத்து மஞ்சள் நிற டேப்பால் சுற்றிப் பார்ப்பதற்கு வெடிகுண்டு போல் தயார் செய்திருந்தனர்.

மிரட்டலுக்காக வெடிகுண்டு போல் செய்து ஓபிஎஸ்  வீடு அருகே யாரோ? மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரிய வந்தது. அது போலி வெடிகுண்டு என்றும் கண்டறியப்பட்டது. இந்த போலி வெடிகுண்டை ஓ.பன்னீர்செல்வம் வீடு அருகே வீசிச் சென்ற மர்ம நபர்கள் யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.