OPS admitted in Covai hospital

ஓபிஎஸ்க்கு புத்துணர்வு சிகிச்சை…கோவை ஆரிய வைத்திய சாலையில் அனுமதி…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதிய அணிக்கான பணிகள், தொண்டர்கள் சந்திப்பு , பொதுக் கூட்டம் என தொடர் பணிகள் காரணமாக சற்று ஓய்வெடுக்கும் வகையில் ஓபிஎஸ் கோவையில் உள்ள ஆரிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வருகிறது.

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மட்டுமே சசிகலாவுக்கு ஆதரவு அளித்து வந்த நிலையில், பொது மக்களும் தொண்டர்களும் ஓபிஎஸ் பின்னால் அணி வகுத்து நிற்கின்றனர்.

இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக்கப்பட்டார். இதையடுத்து ஓபிஎஸ் தரப்பினர் எப்படியாவது அதிமுகவை கைப்பற்றிவிட வேண்டும் என வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்து வருகின்றனர்.

டெல்லி சென்று பிரதமர் மோடியுடன் சந்திப்பு, ஆலோசனைக் கூட்டம், தொண்டர்கள் சந்திப்பு, பொதுக் கூட்டம் என ஓபிஎஸ் தொடர்ந்து பணியாற்றி வரும் நிலையில், இன்று மாலை அவர் கோவையில் உள்ள ஆரிய வைத்தியசாலையில் புத்துணர்வி சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் 2 நாட்கள் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.