இராமநாதபுரம்

கிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள கிராம வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ரூ.3000 கோடி பண பரிவர்த்தனை, வர்த்தக இழப்பு ஏற்பட்டு உள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கி என 627 கிளைகளும், அகில இந்திய அளவில் கிராமப்புற வங்கிகள் மொத்தம் 23 ஆயிரம் கிளைகளும் செயல்பட்டு வருகின்றன. 

இந்த வங்கி கிளைகளில் 1 இலட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்ற நிலையில், "கிராம வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, 

ஓய்வூதியம் வழங்க வேண்டும், 

வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்" உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் 23 ஆயிரம் கிளைகள் மூடப்பட்டுள்ளதால் சுமார் ரூ.3000 கோடி பண பரிவர்த்தனை, வர்த்தக இழப்பு ஏற்பட்டு உள்ளது.