சென்னை:

ஆளுநரிடம் பெரும்பாண்மையை நிரூபிக்க வாய்ப்பு கேட்டிருந்த ஒபிஎஸ்ஸை மீண்டும் ஆளுநர் சந்திக்க அழைத்து இருக்கிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் இருந்து கசிந்தது. அது உறுதியானால் சசிகலாவுக்கு ஏழரை உறுதி.

நேற்று பிற்பகல் சென்னை வந்த ஆளுநர் வித்யாசாகரை மாலை 5 மணியவில் முதல்வர் ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.

அப்போது, சசிகலா என்னை மிரட்டியதால்தான் பதவியை ராஜினாமா செய்தேன் என்றும், சட்ட சபையில் என்னுடைய பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் தனக்கு இன்னொரு வாய்ப்பு தர வேண்டும என்று கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, இரவு 7.30க்கு ஆளுநரை சந்தித்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் சசிகலா தமக்கு 134 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

ஆனால், ஒபிஎஸ் மற்றும் இதர அமைச்சர்கள் என 4 பேர் என சென்ற பின்பு, 129 பேர் மட்டுமே உள்ள நிலையில் எப்படி 134 என்ற கேள்வி இந்த பிரச்சனையை தொடர்ந்து கண்கஆணித்து வரும் யாருக்கும் நன்றே புலப்படும்.

இதையடுத்து டெல்லிக்கு தமிழக நிலவரம் குறித்து ஒரு அறிக்கையை ஆளுநர் வித்யாசகர் ராவ் அனுப்பியிருந்தார். அதற்கு உள்துறை அமைச்சர், தமிழக அரசியல் முடிவு எடுக்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு என்று பந்தை ஆளுநர் திருப்பி விட்டார்.

இந்த நிலையில் இன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் அழைப்பு விடுக்க உள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.

இந்த சந்திப்பின் போது சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஓபிஎஸ்-க்கு, ஆளுநர் வித்யாசாகர் வாய்ப்பு தருவார்” என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி நடந்துவிட்டால், சசிகலா நேற்று ஆளுநரை சந்தித்தது மட்டும் 7.30 (ஏழரை) – ஆக இருக்காது. சசிகலாவுக்கே ஏழரையாகி விடும்.