பலத்த மழை.. மண்சரிவு… உதகை மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து

தொடர் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் உதகை மலைரயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Ooty train cancelled

தொடர் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவால் உதகை மலைரயில் போக்குவரத்து 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.

Ooty train cancelled

கொரோனா தொற்று குறைந்திருந்த காரணத்தால் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் உதகை மலை ரயில் மீண்டும் தமது சேவையை தொடங்கியது. ரயில் போக்குவரத்து தொடங்கியதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி  அடைந்தனர். பலரும் இந்த ரயிலில் பயணித்து மகிழ்ந்தனர்.

Ooty train cancelled

ஆனால் கடந்த சில நாட்களாக உதகையில் பலத்த மழை கொட்டி வருகிறது. அதன் காரணமாக கல்லாறு ஹில்க்ரோவ் இடையே நிலச்சரிவு ஏற்பட்டது. அதை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் 2 நாட்களுக்கு மலைரயில் போக்குவரத்து இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Ooty train cancelled

மழை நீடிக்க வாய்ப்பு என்பதோடு, சீரமைப்பு பணிகள் இன்னமும் முடியாத நிலையில் இருக்கிறது. எனவே இன்றும், நாளையும் மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள ரயில்வே அதிகாரிகள், குன்னூர், உதகை இடையேயான ரயில் தொடர்ந்து இயங்கும் என்று அறிவித்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios