திருமணத்திற்கு இனி பத்திரப்பதிவு அலுவலகம் வர தேவையே இல்லை.! ஈசியா ஆன்லைனில் பண்ணலாம்- சூப்பர் திட்டம்

திருமண பதிவுகளை எளிதாக்க, தமிழக அரசு புதிய ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் வீட்டிலிருந்தே திருமணத்தை பதிவு செய்து கட்டணத்தை செலுத்த முடியும். 

Online marriage registration scheme to be introduced in Tamil Nadu soon KAK

திருமண பதிவு

பத்திரிக்கை அடித்து, உறவினர்களை கூப்பிட்டு  விருந்து வைத்து திருமணமானது விஷேசமாக நடந்தாலும் அந்த திருமணத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிந்தால் மட்டுமே செல்லுபடியாகும். எனவே பத்திர பதிவு அலுவலகத்தில் மணமகன், மனமகள் போட்டா, ஆதார் ஆவணங்கள், வயது சான்றிதழ் உள்ளிட்ட பல சான்றிதழ்கள் கொடுத்து பதிவு செய்யப்படுகிறது. தற்போது உள்ள சூழலில் பாஃபோர்ட் போன்ற காரணங்களுக்கு திருமண பதிவு சான்றிதழ் அவசியமாக உள்ளது. எனவே இதற்காக மீண்டும் பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளர் முன்பாக கையெழுத்திட்டு முறைப்படி திருமணங்கள் நடைபெறும்.

Online marriage registration scheme to be introduced in Tamil Nadu soon KAK

திருமண பதிவு - பத்திரபதிவு அலுவலகம்

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டம் 2009-ம் ஆண்டு சட்டத்தின் படி திருமணம் நடைபெறும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைபதிவு செய்ய முடியும். இது சட்டம் மாற்றப்பட்டு 2020-ம் ஆண்டு இந்த சட்டத்தில் தமிழக அரசு திருத்தம் ஒன்று கொண்டுவந்தது. அதன்படி மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் கூட திருமணத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலானவர்கள் பத்திர பதிவு அலுவலகத்திற்கு சென்று அலைய விரும்பாத நிலையே உள்ளது. இதனால் பாஸ்போர்ட் பெறும் தம்பதிகள் மற்றும் காதல் திருமணங்கள் செய்பவர்கள் மட்டுமே பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்து வருகின்றனர்

லஞ்சமாக கைமாறும் பணம்

மேலும் பத்திர பதிவு அலுவலங்களில் திருமணத்தை பதிவு செய்வதில் பல்வேறு சிக்கல்கள்களோடு லஞ்சமாக பல ஆயிரத்தில் பணமும் கைமாறுவது தெரியவந்தது. இதனையடுத்து திருமணத்தை பத்திர பதிவு அலுவலகத்தில் சென்று பதிவு செய்யும் முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன் படி  பொதுமக்களே நேரடியாக ஆன்லைனில் கட்டணத்தை செலுத்தி திருமண பதிவுகளை பதிவு செய்யும் நடைமுறையை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வீட்டில் இருந்தே திருமணத்தை பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் செலுத்த முடியும். திருமணம் செய்துகொள்ளப்பட்டதற்கான ஆவணங்கள் உரிய முறையில் இருந்தால் உடனடியாக திருமண சான்றிதழ்களும் வழங்கப்படவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Online marriage registration scheme to be introduced in Tamil Nadu soon KAK

ஆன்லைனில் திருமண பதிவு

தமிழக பத்திர பதிவுத்துறையில் பல்வேறு பணிகள் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்டார்-2 மென் பொருள் மூலமாக எளிமையாக சான்றிதழ்களை வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக ஸ்டார்-3 மென் பொருள் அப்டேட் செய்யப்பட உள்ளது. இந்த சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனவே திருமண பதிவுகள் பொதுமக்களே வீட்டில் இருந்து மேற்கொள்ளும் வகையில் புதிய திட்டம் விரைவில் அறிமுகமாக இருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக தமிழ்நாடு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு பொருந்தும் எனவும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் சிறப்பு திருமணங்கள் போன்றவற்றில் ஏற்கனவே உள்ள நடைமுறைகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios