1 கிலோ வெங்காயம், 1 ரூபா தான்.. கோவையில் கதறும் விவசாயிகள்..! கண்ணீருடன் கோரிக்கை !

சின்ன வெங்காயத்தை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிவித்து கொண்டனர். மேலும் சின்ன வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.

Onion Farmers are worried as small onions are being sold too cheaply petition to coimbatore collectorate

விவசாயிகள் கோரிக்கை :

இன்றைய தினம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை பத்து ரூபாய்க்கு கீழ் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் தங்களுக்கு முதலீடு செய்த தொகை கூட கிடைப்பதில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர் விவசாயிகள்.

1 ரூபாய்க்கு வெங்காயம் :

சின்ன வெங்காய விவசாயத்தை உரிய விலைக்கு விற்பனை செய்ய வழிவகை செய்து தருமாறு  தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்தனர். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் கோவை மாவட தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் மனு அளிக்க வந்த அவர்கள் சின்ன வெங்காயத்தை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிவித்து கொண்டனர். மேலும் சின்ன வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தனர். எனவே மனு அளிக்க வந்த பொதுமக்கள் பலரும் சின்ன வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

Onion Farmers are worried as small onions are being sold too cheaply petition to coimbatore collectorate

இது குறித்து அவர்கள் அளித்த மனுவில், ‘சின்ன வெங்காயம் ஒரு ஏக்கர் விவசாயம் செய்வதற்கு 70 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் எனவும் ஆனால் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனவே தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சின்ன வெங்காயத்தை உரிய விலைக்கு விற்பனை செய்ய வழிவகை செய்து தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios