குழந்தை வலி தாங்க முடியாமல் அலறியது. இதனையடுத்து, பெற்றோர் வந்து பார்த்த  போது குழந்தை எண்ணெய் சட்டியில் விழுந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே குழந்தையை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி ஷாலினி. இந்த தம்பதிக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில், கடந்த 7ம் தேதி மாலை பவிஸ்கா பக்கத்துவீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, வீட்டில் சுடச்சுடப் பலகாரம் சுட்டு விட்டு தனியாக எடுத்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயில் குழந்தை தவறி விழுந்துள்ளது.

இதில், குழந்தை வலி தாங்க முடியாமல் அலறியது. இதனையடுத்து, பெற்றோர் வந்து பார்த்த போது குழந்தை எண்ணெய் சட்டியில் விழுந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே குழந்தையை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பவிஸ்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் தகவல் அறிந்து விரைந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- ஓடும் காரில் வாய்வழி உடலுறவு... நடு ரோட்டில் நிர்வாண ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம்..!