One of the victims died in a fire broke out in TV at home

நெல்லையில் வீட்டில் டிவி வெடித்து ஏற்பட்ட தீவிபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மூதாட்டி கல்யாணி. இவர் தனது வீட்டில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென டிவி வெடித்ததில் வீடு மளமளவென பற்றி எரிந்தது.
இதில் மூதாட்டி கல்யாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 
விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
மின்சாரத்தின் அளவு கூடியதே டிவி வெடிக்க காரணம் என அப்பகுதியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.