திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கள்ளானது. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். 

விழுப்பும் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விளங்கம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது லாரியில் டயர் திடீரென வெடித்தது. இதனையடுத்து டயர் வெடித்ததையடுத்து சாலையிலேயே டயரை மாற்றிக் கொண்டிருந்தனர். 

அப்போது அசுரவேகத்தில் வந்துக்கொண்டிருந்த ஆம்னி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக 4 பேருந்துகள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். உடனே அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தினால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.