சென்னை ஆர்.ஏ புரத்தில் முதியோர் பென்ஷன் வாங்க மாநகராட்சி பள்ளி வாசலில் வரிசையில் நின்ற முதியவர் மயங்கிவிழுந்து மரணமடைந்தார்.

விதவைகள் , முதியோர் பென்ஷனாக தமிழக அரசு மாதந்தோறும் ரூ .1000 வழங்கி வருகிறது. தபால் அலுவலகம் மூலம் மாதா மாதம் வீட்டுக்கு சமீப காலமாக இந்த தொகையை அளிப்பதில் அரசு அதிகம் அலைக்கும் வேலையை செய்து வருகிறது.

சமீபகாலமாக இந்த தொகையை அளிப்பதில் வங்கிகள் மூலம் வாங்கிகொள்ளலாம் என்று கூறப்பட்டது. பின்னர்  செல்லாத ரூபாய் பிரச்சனையில் இந்த முறையை மாற்றி மாந்கராட்சி அலுவலகங்கள் பள்ளிகளில் வரிசையில் நின்று டோக்கன் வாங்க வேண்டும் . மறுநாள் மீண்டும் வரிசையில் நின்று பணத்தை பெற வேண்டும் என நிர்பந்திக்கப்படுகின்றனர்.

இன்னும் சில இடங்களில் காலையிலிருந்து வெயிலில் காத்துகிடக்கும் மக்களை நாள் முழுதும் நிற்கவைத்து பின்னர் திரும்ப அனுப்புகின்றனர். இதனால் முதியோர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். 

இது போன்று ஆர்.ஏ,புரம் சிருங்கேரி மடம் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் முதியவர்கள் காலையிலிருந்து வரிசையில் நிற்கவைக்கப்பட்டனர். இதில் காலையிலிருந்து நின்ற மந்தைவெளி பெரிய தாரக்கோட்டை  பகுதியை சேர்ந்த   சுப்ரமணி(68) என்பவர் திடீரென சுருண்டு விழுந்தார்.

அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு தண்ணீர் கொடுத்து சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் அவர் ஏற்கனவே அவர் உயிரிழந்ததால் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இந்த சம்பவம் பற்றி அங்கிருந்தவர்கள் கூறும்போது முதியவர்கள் அரசாங்கம் கொடுக்கும் 1000 ரூபாயை நம்பி ஜீவனை தள்ளுகிறார்கள். அதை கொடுப்பதிலும் அதிகாரிகள் செய்யும் இதுபோன்ற நடைமுறைகளால் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

காலையிலிருந்து சாப்பிடாமல் தண்ணீர் கூட கிடைக்காமல் வாடி நிற்கும் முதியவர்கள் மரணத்தின் வாயிலில் நின்றுத்தான் இந்த தொகையை பெற வேண்டுமா? என்பதே அனைவர் முன்பும் உள்ள கேள்வி.