இராமநாதபுரத்தில், சல்லிக்கட்டு நடத்தவும், பீட்டாவை தடை செய்யவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியைச் சேந்த மூவர் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்கள் கூடி சல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி, பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

இந்தாண்டு சல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று போராட்டங்கள் வலுக்கின்றன.

இந்த நிலையில், இராமநாதபுரம் பாண்டியூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாலா, கௌதம், நிவாஸ் ஆகிய மூவரும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

கோபுரத்தின் உச்சிக்கு சென்று, அங்கிருந்து சல்லிக்கட்டு நடத்தவும், பீட்டாவை தடை செய்யவும் முழக்கங்களை எழுப்பினர்.

கீழே கூடிய மக்கள் எடுத்துரைத்தும் அவர்கள் மூவரும் இறங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.