மின்சார வாரியத்தின் ஆட்சேர்ப்பு பற்றிய அறிவிப்பாணை ரத்து… அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!!
மின் வாரியத்தில் 5,318 பணி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து வெளியான அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மின் வாரியத்தில் 5,318 பணி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து வெளியான அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021 ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் கொரோனா பரவல், சட்டமன்ற பொதுத் தேர்தல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அனைத்து அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு பணிகளையும் டி.என்.பி.எஸ்.சி மேற்கொள்ளும் என்ற அரசாணையின்படி, மின்சார வாரியம் மேற்கொள்ளவிருந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜூலை 11ம் தேதி விடுமுறை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு - எதற்கு தெரியுமா?
இதனால், மின்சார வாரிய பணிகளுக்காக விண்ணப்பித்து ஓராண்டுக்கும் மேல் காத்திருந்த தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் ஆட்சேர்ப்பு பணிகளை டி.என்.பி.எஸ்.சி மேற்கொள்ளும் என்ற அரசாணையின் படி, மின்சார வாரியம் மேற்கொள்ளவிருந்த நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தில் 5,318 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை அண்மையில் தமிழக அரசு வெளியிட்டிருந்தது.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்.. கிருஷ்ணகிரி ஆட்சியர் வெளியிட்ட குட்நியூஸ்..!
இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உட்பட என மொத்தம் 5,318 இடங்களுக்கான ஆட்சேர்ப்பு குறித்து வெளியான அந்த அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. கணினி வழி தேர்வு ரத்து செய்யப்படுவதுடன், கட்டணமும் திருப்பித் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்கள் தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி மேற்கொள்ளும் என்பதால் இந்த அறிவிப்பானை ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.