norway meteorological center warned for heavy rain will be happen
காலை முதல் சென்னையில் பரவலாக மிதமான மழை இருக்கும் பகல் 12 மணிக்குப் பிறகு பலத்தமழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை நிலவரம் குறித்த வானிலை ஆய்வுமையத்தின் தகவல்கள் உறுதிப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பெய்துவருகிறது, குறிப்பாக தலைநகர் சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது.
நேற்று மாலைக்குப் பிறகு சென்னையில் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதே போல நேற்று இரவு பலத்தமழை பெய்தது. மூன்றாவது நாளாக நேற்றிரவு கனமழை பலத்த மழை பெய்ததால் சென்னையின் பல இடங்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் காலை முதல் சென்னையில் பரவலாக மிதமான மழை இருக்கும் என்றும் இன்று பகல் 12 மணிக்குப் பிறகு சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அதுபோலவே நேற்று மாலை முதலே தொடங்கிய மழை விடிய விடிய புரட்டிப்போட்டது. இந்நிலையில் இன்றும் பகல் 12 மணிக்குப் பிறகு சென்னையில் பலத்த மழை பெய்யும் என நார்வே நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் இரவில் மழை மிதமாக இருக்கும் என்றும் நார்வே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
