Northwest youth who tried to smash the girl with a knife The people who flattered flutter ...

கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு நகை பறிக்க முயற்சித்த வடமாநில வாலிபரை மடக்கிப் பிடித்த மக்கள் மடக்கி அடித்து வெளுத்து பின்னர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மனைவி இராதாமணி. இவர் தள்ளுவண்டியில் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் நேற்று மதியம் கடை யில் இருந்தபோது வடமாநில வாலிபர்கள் இருவர் அங்கு வந்தனர். அவர் இராதாமணியிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டு பேச்சுக் கொடுத்துள்ளனர்.

அவர் தண்ணீர் எடுக்க திரும்பும்போது அந்த வாலிபர்கள் திடீரென்று தள்ளுவண்டியில் வெங்காயம் நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து இராதாமணி கழுத்தில் அணிந்திருந்த நகையை கேட்டு மிரட்டினர்.

அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள், இராதாமணியின் கழுத்து மற்றும் கைகளில் கத்தியால் பலமாக குத்தியுள்ளனர். இதனால் வலியால் துடித்த அவர் கூச்சல் போட்ட உடனே அங்கிருந்தவர்கள் விரைந்து வர அந்த வாலிபர்கள் தப்பி ஓட முயன்றனர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவனை மக்கள் மடக்கிப் பிடித்தனர். அப்போது அந்த வடமாநில வாலிபர் தன்னை பிடிக்க வந்த ஆறுகுட்டி என்பவரை கத்தியால் குத்தினார். இதில் அவர் காயம் அடைந்தார்.

பின்னர், மக்கள் அந்த வடமாநில வாலிபரை மடக்கிப் பிடித்து சரமாரியாக அடித்து வெளுத்தனர். அதன்பின்னர் அவரை சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் ஒடிசாவைச் சேர்ந்த துல்லா (27) என்பதும், அங்குள்ள தனியார் பஞ்சாலையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. காயமடைந்த துல்லா சிகிச்சைக்காக கோயமபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பெண்ணை கத்தியால் குத்திவிட்டு வடமாநில வாலிபர்கள் நகை பறிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.