வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு சற்று தாமதமாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.

செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, தமிழகத்தின் மீதோ, அதைச் சுற்றியோ குறிப்பிடத்தக்க அளவு மேக கூட்டங்கள் இல்லாதது தெரிய வந்துள்ளது. வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 12 முதல் 28ம் தேதிக்குள் தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டில் அது வருகிற 20ம் தேதிக்கு முன்னதாகத் தொடங்க வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றோ, நாளையோ மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பாெறுத்தவரை வானம் மேகமமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.